அனைத்துலகத் தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் கல்வித்திட்டத்தின் கீழ் மாணவர்கள் எடுக்கும் தமிழ்ப் பாடத் தேர்வுக்கு பிரித்தானியக் கல்விக் கட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளமுடியும்.
ஆண்டு 01 – ஆண்டு 09 வரையான மாணவர்கள் எடுக்கும் சான்றிதழ்களின் பயன்கள்:
11+ இதற்கு விண்ணப்பிக்கும் போது ‘’மேலதிகக்கல்வி’’ என்ற அடிப்படையில் பெறும் புள்ளிகளுக்குப் பயன்படுத்தக் கூடியவையாக உள்ளன.
ஆரம்பப் பாடசாலையிலிருந்து உயர் பாடசாலைக்கு விண்ணப்பிக்கும் போது, பயன்படுத்தக் கூடியவையாக இருக்கின்றன.
A/L ற்கு புதிய பாடசாலைக்கு விண்ணப்பிக்கும் போது, பெறுமதிமிக்கவை. - SIXTH FORM ற்கு விண்ணப்பிக்கும் போது, பயன்படுத்திக் கொள்ளக்கூடியவை.
ஆண்டு 10 – ஆண்டு 12 வரையான மாணவர்கள் எடுக்கும் சான்றிதழ்களின் பயன்கள் (30 வரையான UCAS புள்ளிகளைப் பெறமுடியும்).
பல்கலைக் கழகத்திற்கு விண்ணப்பிக்கும் போது UCAS புள்ளிகளைப் பெற்றுக்கொள்வதற்குப் பயன்படுத்த முடியும்.
வேலைக்கு விண்ணப்பிக்கும் போது மேலதிகமாக தெரிந்துள்ள மொழி என்ற அடிப்படையில் இந்தச் சான்றிதழ் பெருமை சேர்க்கும்.
ரெடிங் தமிழ் கல்விக்கூடம் கடந்த 2009ம் ஆண்டு பல தமிழ் ஆர்வலர்களின் கூட்டுமுயற்சியினால் உருவாக்கப்பட்டது. ரெடிங் மாநகரில் தமிழ்ச் சிறார்களின் தமிழ் கல்வி கலாச்சார விடயங்களை மேம்படுத்தும் முகமாக கடந்த 15 வருடங்களாக பணியாற்றி வருகின்றோம்.
We have been teaching Tamil for over 15years. Our teachers are willing to built trusting relationships with students in order to create a safe, positive, and productive learning environment.